பிரேஸிலின் தெற்கு மாநிலமான பரானாவில் நேற்று பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஸ்ஸில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், லொறி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
லொறி எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்தை தொடர்ந்து BR-373 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
