பெரு சிறைசாலைகளில் அவசரநிலை பிரகடனம்

பெருவில் உள்ள சிறைசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 05 சிறைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறை பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இராணுவம், மற்றும் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் பதவியேற்ற ஜனாதிபதி கெய்கோ ஃபுஜிமோரியின் அரசாங்கத்தால் இதற்கான ஆணையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சிறைகளுக்கு உள்ளிருந்து வெளியை நோக்கி செயல்படும் குற்ற அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள சிறையில் குற்ற அமைப்புகளுடன் தொடர்புடைய கைதிகளில் சுமார் 50 சதவீதமானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதியின் ஆணையின்படி, சிறைகளைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் மின்காந்த அலைவரிசையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இராணுவ மற்றும் காவல்துறைப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles