ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க!

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதலில் 89.04m தூரம் வௌிப்படுத்தி ருமேஷ் தரங்க தங்கப்பதக்கத்தை பெற்று ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், டைமண்ட் லீக் இறுதிப் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கை வீரர் என்ற வரலாற்றுப் பதிவை ருமேஷ் தரங்க தனதாக்கிக்கொண்டார்.

இலங்கை நேரப்படி இன்று (06) அதிகாலை நிறைவடைந்த இப்போட்டியில், அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிலாநாட்டினார்.

இப்போட்டியில் ருமேஷிற்கு கடும் சவாலாக விளங்கிய போலந்தின் டேவிட் வேக்னர் (Dawid Wegner) 87.47 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மேலும், 83.99 மீற்றர் தூரம் எறிந்த ட்ரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் கெஷோர்ன் வோல்கோட் (Keshorn Walcott) மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles