கிழக்கு கொங்கோவின் கிவு ஏரியில் சுமார் 80 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியாபாரிகள் மற்றும் மீன்களை ஏற்றிக்கொண்டு பயணித்த இந்தப் படகு, அதிக எடை காரணமாக கவிழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்போன ஏனையவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடந்த 25ஆம் திகதி கொங்கோவின் டாங்கனிகா ஏரியில் இடம்பெற்ற மற்றுமொரு படகு விபத்தில் 41 பேர் உயிரிழந்திருந்தமை தெரிந்ததே.
கொங்கோவில் நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போக்குவரத்துக்காக நதிகளையும் ஏரிகளையும் பெரிதும் நம்பியுள்ள நிலையில், அங்கு இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
