கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி!

கனடாவின் மாண்ட்ரீல் நகரின் தெற்குப் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

செயிண்ட்-பிரிஜிட்-டிபெர்வில் நகராட்சியில் உள்ள 10ஆவது நெடுஞ்சாலைக்கு அருகே ராங் டெஸ் எகோசைஸ் பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து தீப்பிடித்ததையடுத்து, பிற்பகல் 2:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாகாண காவல் துறையான சுரேட்டே டு கியூபெக் தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என காவல் துறையினர் உறுதிப்படுத்தினார்.

விரைந்து செயல்பட்ட மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரத்திற்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

எனினும், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் யாருக்கு சொந்தமானது, அது எங்கிருந்து புறப்பட்டது, எங்கு சென்று கொண்டிருந்தது மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் ஆகியவற்றை காவல் துறையினரால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விபத்து நடந்த இடத்திற்குத் தனது விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles