திலீபனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நல்லூரில் போராட்டம்!

Crowd of people standing along a road holding protest signs in Tamil, with colorful storefronts behind.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 5 மணி முதல் தமிழர்களின் எழுச்சிப் போராட்டம் ஒன்று மிகத் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளது.

பொலிஸாரின் இந்த அடாவடித்தனமான செயலுக்கு எதிராகத் திரண்ட பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நினைவாலயத்துக்கு முன்பு ஒன்றுகூடித் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்” என்ற உணர்வுபூர்வமான கோஷங்களுடன் இந்தக் கண்டனப் போராட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே சிலை அகற்றப்பட்டதை அடுத்துப் பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வெறுமையான பீடத்திற்கு மலரஞ்சலி செலுத்தியிருந்த நிலையில், தற்போது மாலை வேளையில் தமிழர்களின் எழுச்சிப் போராட்டமாக இது பரிணமித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles