கனடா, ஐஸ்லாந்து நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் வரைபடத்தை ட்ரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை

கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கனடா, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவற்றை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டுவது போன்ற ஒரு வரைபடத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார்.

இந்த வார இறுதியில், ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் சுமார் 100 செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த நிலையில், இந்த விசித்திரமான வரைபடமும் அந்தப் பதிவுகளில் அடங்கும்.

இந்தப் புதிய வரைபடப் பதிவு குறித்து பதிலளித்த ஐஸ்லாந்து, அந்தப் படம் முற்றிலும் பொருத்தமற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்கத் தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அந்த வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் அமெரிக்கக் கொடியால் வண்ணமிடப்பட்டிருந்தது.

ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், முழு நிலப்பரப்பும் “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” என்று பெயரிடப்பட்டு, வேறு எந்த விளக்கமும் இன்றி பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles