ஈரானின் 10 எண்ணெய்க் கப்பல்களை அழித்தாக அமெரிக்கா அறிவிப்பு

மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் இரண்டு அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலை அமெரிக்க இராணுவம் நிராகரித்துள்ளது.

“அமெரிக்க கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை. IRGC மேற்கொண்ட அனைத்து தாக்குதல் முயற்சிகளும் தோல்வியடைந்தன” என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஈரானுடன் தொடர்புடைய 10 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் IRGC இற்கு நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ‘Shadow Network’ எனப்படும் மறைமுக வர்த்தக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles