வடமராட்சி பகுதியில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முன்பகை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தடயவியல் பொலிஸார் மற்றும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
