காஸாவின் பெய்த் லஹியா பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 மற்றும் 12 வயதுடைய இரு குழந்தைகளும் அடங்குவதாக பாலஸ்தீனிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் வீடு ஒன்று சேதமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் மோசமாக சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
