கரீபியன் கடற்பகுதிகளில் பயணித்த கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ‘மேற்கு அரைக்கோள கூட்டுப் பணிக்குழு’ (Joint Task Force Western Hemisphere) இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் ‘தெற்குப் படைப்பிரிவு’ (SOUTHCOM) வெளியிட்டுள்ள செய்தியில், இத்தாக்குதல் தங்கள் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதாகவும், அப்படகானது போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது என்பது உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
