ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை அமைக்க தெஹ்ரானின் அனுமதி கட்டாயம்

ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிகாரிகளின் சிறப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் ஃபார்ஸ் (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உளவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

‘பிரிவு 10’ (Article 10) என்று முறைப்படி அழைக்கப்படும் இந்தச் சட்டப் பிரிவு, இந்த நீரிணை வழியாகச் செல்லும் பிற தரவுத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும் என ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தச் சட்டத்தின் துல்லியமான விவரங்கள் பல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles