சிங்கப்பூரில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 14 ஆண்டுகள் சிறை!

சிங்கப்பூரில் இளம் வயதுப் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 21 வயது இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

குற்றம் புரிந்தபோது அவரின் வயது 15லிருந்து 17 வயதுக்கு இடைப்பட்டிருந்தது. இளைஞரால் பாதிக்கப்பட்டோர் அப்போது 13 இலிருந்து 16 வயதுக்கு இடைப்பட்டிருந்தனர்.

காவல் நிலையத்தில் இருந்தபோதும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோதும் அந்த இளைஞர் ஒருசில குற்றச் செயல்களைப் புரிந்தார் என வழக்கறிஞர்கள் கூறினர்.

அதைத் தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டமை, வேண்டுமென்றே ஆயுதங்களைக் கொண்டு அடுத்தவர்களுக்கு காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட வன்முறை சார்ந்த குற்றங்களிலும் அவர் ஈடுபட்டார்.

பாலியல் வன்கொடுமை, மானபங்கம் செய்தமை, கலவரத்தில் ஈடுபட்டமை, ஆயுதம் கொண்டு காயம் விளைவித்தமை ஆகிய குற்றங்களை திங்கட்கிழமை (செப்ரெம்பர் 21) அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மிரட்டல் விடுத்தமை, பாதிக்கப்பட்டோரின் ஆபாசப் படங்களையும் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளையும் விநியோகம் செய்தமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகளை தீர்ப்பின்போது நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

இளைஞரால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் ரகசியமாக வைத்திருக்க அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. குற்றம் புரிந்தபோது 18 வயதுக்குக்கீழ் இருந்ததால் அவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2020ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2022ஆம் ஆண்டு டிசெம்பர் வரை சமூக ஊடகங்கள், தெரிந்த நண்பர்கள் மூலம் அவர் இளம் பெண்களைத் தேடினார் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles