ஏர்ல் ஸ்பென்சரின் நினைவுக் குறிப்பிற்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய மன்னர்

இளவரசி டயானாவைப் பற்றிய ஏர்ல் ஸ்பென்சரின் Earl Spencer நினைவுக் குறிப்பு வெளியான பிறகு, மன்னர் சார்லஸ் முதன்முறையாக ஸ்காட்லாந்தில் அரசப் பணிகளில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்தப் புத்தகம், டயானாவின் வாழ்நாளின்போதும், 1997ல் அவர் இறந்த பிறகும், அவரிடம் மன்னர் நடந்துகொண்ட விதம் குறித்த பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தத் துயரமான விபத்தைத் தொடர்ந்து, மன்னர் “நாம் அவளை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாகவும், அவர் “பேரானந்தத்தில் திளைத்திருந்தார்” என்றும் ஏர்ல் ஸ்பென்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனை “சகோதரத்துவத் துயரம் பகுத்தறிவை மழுங்கடிக்கக்கூடும்” என்று கூறி, பதிலளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மன்னர் தனது அதிகாரப்பூர்வ பணிகளை ஆரம்பித்துள்ளார்.

தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஈடுபட்டுள்ள அமைப்புகளைச் பார்வையிடுவதற்காக, அபெர்டீன்ஷையரில் Aberdeenshire உள்ள பீட்டர்ஹெட் Peterhead துறைமுகத்திற்குச் சென்று, மன்னர் தனது அதிகாரப்பூர்வப் பணிகளைத் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles