யாழில் இரு சிறுமிகளை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு செய்யமுயன்ற ஓட்டோ சாரதி கைது

கிளிநொச்சியில் இருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரு சிறுமிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற முச்சக்கர வண்டிச் சாரதி பொலிஸாரிடம் சிக்கினார்.

கிளிநொச்சியில் இருந்து காரைநகர் செல்லும் நோக்கில் இரு சிறுமிகள் பேரூந்தில் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்கி காரைநகருக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது இரு சிறுமிகள் மீதும் சந்தேகம்கொண்ட சில முச்சக்கர வண்டி சாரதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்க முற்பட்டதனை அவதானித்த ஓர் முச்சக்கரவண்டி சாரதி அதனை சிறுமிகளிடம் கூறி தனது முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.

பேரூந்து நிலையத்தில் இருந்து காரைநகர் கூட்டிச் செல்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்ற சாரதி சிறுமிகளை மாதகல் பிரதேசத்தின் ஓர் மறைவான பகுதிக்கு கொண்டு சென்று ஒரு சிறுமியின் ஆடைகளை களைந்து துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தபோது இரண்டாவது சிறுமி கையில் இருந்த பொருளால் தாக்கி கூக்குரல் இட்டதால் ஒரு சிறுமியை மட்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றியவாறு தப்பிச் சென்றுள்ளார். அப்பகுதியில் கூடிய பொதுமக்களிடம் மற்றைய சிறுமி விடயத்தை கூறியதும் இளவாளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பொலிஸார் விரைந்து சென்று ஒரு சிறுமியை மீட்டனர். சிறிது நேரத்தில் இரண்டாவது சிறுமியையும் பொலிஸ் நிலையத்தில் இறக்கிவிட முனைந்த முச்சக்கர வண்டிச் சாரதியையும் பொலிஸார் கைது செய்தனர். சிறுமிகள் நேற்றைய தினம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சிறுமிகள் பாதிக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டபோதும் முச்சக்கர வண்டி சாரதி துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதனால் அவர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles