ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசியர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

இலங்கை கடற்படையினரால் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் நேற்று (24) கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு தெற்கே கடந்த 22 ஆம் திகதி கவிழ்ந்த ‘KM கருடா ஜெயா VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இந்த பணியாளர்கள் பயணித்ததனர் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்கு உட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குதான் இவர்கள் முதலில் ஆபத்தில் இருக்கின்றனர் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘MV மூன்ஸ்டோன்’ என்ற வர்த்தகக் கப்பல் கடலில் தவித்த 25 பேரையும் மீட்டு, கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் அளித்தது.

அவசர கால அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, கொழும்பு MRCC ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கை கடற்படை 2 படகுகளை அனுப்பி, MV மூன்ஸ்டோன் கப்பலால் மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு அழைத்து வந்தது.

அதன்படி, கடற்படையினரால் மீட்கப்பட்ட 25 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மனிதாபிமான உதவிகளை வழங்கியதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles