நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் பெயர்த்து செல்லப்பட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் கடந்த 15ஆம் திகதி, தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு 12 நாட்களாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று நினைவேந்தல் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலை பொலிஸார் தியாக தீபம் திலீபனின் உருவச் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
