பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடமையின் நிமித்தம் அவர இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி பொலிஸ் நிலையம் நோக்கி பயணித்த பொழுது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் தனங்களப்புப் பகுதியி நிலை தவறி கால்வாயில் விழுந்துள்ளார்.
இதன்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த எமிலியான் அன்ரனி (வயது-30) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
