இங்கிலாந்தின் பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி காலமானார்

பிரபல மல்யுத்த வீரரும் PAC என்ற பெயரில் அறியப்பட்டவருமான பெஞ்சமின் சட்டர்லி (Benjamin Satterley) தனது 40ஆவது வயதில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் நியூகாசில் அபான் டைனைச் சேர்ந்த அவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மல்யுத்தத்தில் ஈடுபட்டு, WWE மற்றும் All Elite Wrestling (AEW) உள்ளிட்ட முன்னணி அமைப்புகளில் போட்டியிட்டுள்ளார். WWEயில் Adrian Neville என்ற பெயரில் போட்டியிட்ட அவர், 2014ஆம் ஆண்டு NXT சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு AEWயில் இணைந்து, AEW All-Atlantic Championship மற்றும் AEW World Trios Championship பட்டங்களையும் வென்றார்.

செப்ரெம்பர் 26ஆம் திகதி சிகாகோவில் நடைபெற்ற AEW All Out நிகழ்வில் Andrade El Idoloவுக்கு எதிரான போட்டியே அவரது இறுதி போட்டியாக அமைந்தது.

பெஞ்சமின் சாட்டர்லியின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெஞ்சமின் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles