ட்ரம்பின் சகாக்களை தோற்கடிக்குமாறு அமெரிக்க வாக்களர்களிடம் ஈரான் கோரிக்கை

ஈராக்கில் எஞ்சியிருந்த அமெரிக்கப் படைகள் புதன்கிழமை முழுமையாக வெளியேறிய நிலையில், இதனைத் தங்களின் வெற்றியாகக் கொண்டாடும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC), அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்குமாறு அமெரிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் தன் மத்தியஸ்தப் பேச்சுகளைத் தொடர்ந்து வருகிறது. எனினும், ஈரான் விரைவில் சரணடையும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஈரானியக் காவல் படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், தங்களின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்போதைய அமெரிக்கத் தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வெளிநாட்டு ராணுவத் தலையீடுகளை அமெரிக்க மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய ஊடகங்களில் வெளியாகும் இந்த அறிக்கை அமெரிக்க வாக்காளர்களைப் பெரியளவில் பாதிக்காது என்ற போதிலும், வரவிருக்கும் நவம்பர் 3 நாடாளுமன்றத் தேர்தலில் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிராக உள்ள முக்கியப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்று நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அது டிரம்ப்பின் அரசியல் திட்டங்களுக்குப் பெரும் முட்டுக் கட்டையாக அமையும்.

“அமெரிக்காவின் தற்போதைய அவல நிலைக்குக் காரணமான தீய, வஞ்சகமிக்க மற்றும் வன்முறை அரசியல்வாதிகளைப் பதவியிலிருந்து அகற்றுங்கள். உலகம் மாறிவிட்டது என்பதை உங்கள் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதை உறுதிசெய்யுங்கள்,” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles