பிரித்தானியா கல்வியாளர்களை குறிவைக்கும் சீன உளவு அமைப்பு

சீனாவின் உளவுத்துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கல்விசார் ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்கி வந்த சீன அமைப்பு குறித்து பிரித்தானியாவின் ‘MI5’ உளவு அமைப்பு, முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

MI5 வெளியிட்ட உளவு எச்சரிக்கை அறிக்கையில்,

பிரித்தானியாவைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ‘China General Technology Research Institute’ (CGTRI) நிதியளித்த திட்டங்களில் பங்களித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.

“MSS அமைப்பின் தொழில்நுட்ப உளவுத் திறனை நேரடியாக மேம்படுத்தும் கல்விசார் ஆராய்ச்சிகளுக்கு நிதியளிப்பதே CGTRI அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

பிரித்தானியா கல்வியாளர்கள் , செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மறைமுகத் தொடர்பாடல் அமைப்புகள் மற்றும் Steganography – தகவல்களை இரகசியமாக மறைத்து அனுப்பும் முறை) போன்ற தலைப்புகளில் இந்த நிதி உதவியைப் பெற்றுப் பணியாற்றியுள்ளனர்.

இது பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று MI5 தெரிவித்துள்ளது.

MI5 அமைப்பு தனது வரலாற்றிலேயே முதன்முறையாகச் சுதந்திரமாகப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

பல கல்வியாளர்களும் நிறுவனங்களும் CGTRI அமைப்பிற்கு MSS உடனான தொடர்பை அறியாமல் நல்விருப்பத்துடன் செயல்பட்டிருக்கலாம் என MI5 சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இனிமேலும் அந்த அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் 2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ் கூறுகையில், பிரிட்டனில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும், சீன அமைப்புடனான அனைத்துத் தொடர்புகளையும் ஊழியர்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், லண்டனில் உள்ள சீனத் தூதரகம் இந்த எச்சரிக்கையை முற்றிலும் புனையப்பட்டது என்றும் மலிவான அவதூறு என்றும் கூறி மறுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles