டெல்லி முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்து பேச்சு நடத்தியது.

இச்சந்திப்பில் டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, டெல்லி மாநில அரசாங்கத்தினால் தமக்களின் தேவைகள் மற்றும் நலன்புரிக்காகவும், டெல்லி நகரின் வளர்ச்சிக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான குழுவினர், ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

பெண்களின் நலன், பொருளாதார வலுவூட்டல் மற்றும் அவர்களின் சுயசார்பை உயர்த்துவதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தில்லி மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்தும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் ரில்வின் சில்வா விளக்கமளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles