ஐரோப்பாவை உலுக்கிய சைபர் தாக்குதல்கள் – 16 வயது இளைஞர் கைது

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சுமார் 1,000 ரான்சம்வேர் தாக்குதல்கள் தொடர்பாக 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஐரோப்பா தழுவிய விசாரணையின் ஒரு பகுதியாக, கில்செக் (KillSec) என்ற ஹேக்கர் குழுவின் முக்கிய இயக்குநராக சந்தேகிக்கப்படும் இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலிகாண்டே நகரில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்று ஸ்பெயின் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கில்செக் KillSec குழுவின் “நிர்வாகி”யாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, யூரோபோலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வாறான தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா மற்றும் ருமேனியாவில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கில்செக் KillSec , “மென்பொருள் குறைபாடுகளையும், குறிப்பாக கிளவுட் சேமிப்பகத்திற்கான பாதுகாப்பற்ற அணுகல் புள்ளிகளையும்” பயன்படுத்தி, முக்கியமான தகவல்களை நகலெடுத்து இந்த குற்றங்களை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதற்காக ஸ்பெயின், கிரீஸ், ருமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள எட்டு வீடுகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles