குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான சிம்ரன் படேல் (47), ரூ.500 நோட்டை வைத்து மகாத்மா காந்தியை கிண்டல் செய்து ரீல்ஸ் வெளியிட்ட குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒக்.1ஆம் திகதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவர் வெளியிட்ட ரீல்ஸ், மகாத்மா காந்தியின் மரியாதையைக் அவமதிக்கும் வகையில் பேசி, வீடியோ வெளியிட்டிருந்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில், வழக்குப் பதிவு செய்த சூரத் காவல்துறை, சிம்ரனை கைது செய்துள்ளது. மேலும், அவர் தன்னுடைய வீடியோவுக்கு மன்னிப்பும் கேட்டுள்ள வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு நின்றுவிடாமல், சிம்ரனின் வீடியோவை கட் செய்து, அதனுடன், அவரைக் கைது செய்துள்ள விடியோவையும் மகாத்மா காந்தியை அவமதித்து வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்புக் கேட்கும் வீடியோவையும் இணைத்து சூரத் காவல்துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
கைதாகியிருக்கும் சிம்ரன் போன்று, தவறான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் யாரும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம், அதுவும் குற்றம்தான் என்று பதிவிட்டுள்ளனர்.தற்போது சிம்ரனின் கைது வீடியோ வைரலாகியிருக்கிறது.
