போர் விமானத்தை தனியாக இயக்கி தாய்லாந்து ராணி சுதிடா உலக சாதனை!

தாய்லாந்து நாட்டின் ராணி சுதிடா தனியாகப் போர் விமானத்தை இயக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், உலகில் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் மற்றும் ஒரே
ஆளும்ராணி என்ற வரலாற்று பெருமையை அவர் பெற்றுள்ளார். தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் ‘விங் 7’ றோயல் தாய்லாந்து விமானப்படைத் தளம் அமைந்துள்ளது.

இந்த விமானப்படை தளத்தில் நேற்று (வியாழக்கிழமை) தாய்லாந்து நாட்டின் ராணி சுதிடா, சுவீடன் தயாரிப்பான அதிநவீன ஒற்றை இருக்கை கொண்ட ‘ஜேஏஎஸ் 39சி கிரிபென்’ (JAS 39C) போர் விமானம் ஒன்றை வெற்றிகரமாக தனியாக இயக்கிப் பறந்தார்.

இதன் மூலம் ராணி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சுதிடா போர் விமானத்தை தனியாக இயக்கியதை அவரது கணவரும் தாய்லாந்து மன்னருமான மகா வஜிரலோங்கோர்ன் தரைப்பகுதியில் இருந்து நேரில் கண்டு ரசித்தார்.

ராணி பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்திய மன்னர், பைலட்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற ‘கிரிப்பன் ஆர்டர் கோல்டன் பேட்ச்’ சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.

ராணி சுதிடாவிற்கு விமானப் போக்குவரத்துத் துறை முற்றிலும் புதியது அல்ல. கடந்த 2019இல் ராணியாவதற்கு முன்பாக, அவர் ‘தாய் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்ட அவர், போயிங் 737 உட்பட பல்வேறு விமானங்களில் 1,188 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்த அனுபவம் கொண்டவர். அரச குடும்பத்து விமானங்களில் பலமுறை துணை விமானியாகவும் அவர் செயல்பட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இந்த சாதனை ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles