அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிருப்தி

அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடைகளை உறுதியாக நிராகரித்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC), நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யுமாறு உறுப்பு நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தடை நடவடிக்கை நீதியின் பாதையை முடக்கும் முயற்சியாகும்; நீதிமன்றம் உருவாக்கப் பட்டதன் நோக்கத்தையே தடுக்கும் செயலாகும்.

இது சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேசச் சட்ட அமைப்பின் அடித்தளத்திற்கும் எதிரான தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பு நாடுகள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்கள் புரிந்த நபர்களைத் தண்டிக்கத் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளை முழுமையாகத் தொடர்ந்து நிறைவேற்றுவதாக அந்த நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தச் சூழலைத் தனியாக எதிர்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அமெரிக்கா உறுப்பினராக இல்லாத போதிலும், தன் செயல்பாடுகளுக்குத் தேவையான வழிவகைகளை உறுதி செய்யுமாறு ஏனைய உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனியாக இயங்கிவிட முடியாது. இதன் எதிர்காலம் தற்போது இதனை உருவாக்கிய நாடுகளின் கரங்களிலேயே உள்ளது. இது ஏதோ ஒரு தனி நிறுவனத்தைப் பாதுகாப்பது பற்றிய விஷயம் மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பது பற்றியது. இந்த வரலாற்றுத் தருணத்தைக் காலம் நிச்சயம் கணக்கிடும்” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles