காசாவில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் நால்வர் உயிரிழப்பு

காஸாவில் இன்று இடம்பெற்ற தனித்தனி தாக்குதல் சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

காஸா நகரில், ஒரு கார் மீதான தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில், இருசக்கர வாகனத்தில் சென்ற பலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும், வடக்கில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்கள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles