சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஐரோப்பாவின் உயரிய விருது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் (ICC) அதன் அதிகாரிகளும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சாகரோவ் மனித உரிமைகள் விருதை (Sakharov Prize) வென்றுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபெர்ட்டா மெட்சோலா (Roberta Metsola) வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இரு வாரங்களுக்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் இந்த விருதை அறிவித்த மெட்சோலா, “பல்வேறு நாடுகளின் கூட்டுறவு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் மீதான மரியாதையின் மீதே ஐரோப்பிய ஒன்றியம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தையும் நீதியையும் நிலைநிறுத்துவதில் இந்த நீதிமன்றம் ஆற்றிவரும் முக்கிய பணியை இந்த விருது அங்கீகரிக்கிறது” என்று தெரிவித்தார்.

போர்க்குற்றங்களை விசாரிக்கும் இந்த நீதிமன்றத்திற்கு இந்த மாதத்தில் கிடைக்கும் இரண்டாவது சர்வதேச அங்கீகாரம் இதுவென்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடைகளை அறிவித்து இரு வாரங்களுக்குள் இது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நவி பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவாகவே பரவலாகப் பார்க்கப்பட்டது.

நெதர்லாந்தின் ஹேக் நகரை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக 2024 இல் கைது பிடியாணை பிறப்பித்ததில் இருந்து அதற்கு எதிரான ட்ரம்பின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles