ரஷ்யாவின் அவசரகால எச்சரிக்கை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
இன்று காலை உக்ரைனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.
வரவிருக்கும் டிரோன் தாக்குதல்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களை எச்சரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அந்தச் செயலியில், ஹக்கர்கள் “தவறான தகவல்களை” பதிவிட்டதாக மொஸ்கோவின் அவசரகால அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் உக்ரைனின் கிழக்கு கெர்சன் பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட, போரின் மிக நீண்டகால போர்நிறுத்தம், நீட்டிப்புக்கான வாய்ப்பை ரஷ்யா நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த இணையழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே கதிர்வீச்சு அச்சுறுத்தல் குறித்த ஆதாரமற்ற எச்சரிக்கைகள் செயலியில் தோன்றியதைத் தொடர்ந்து, தனது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு ஊடுருவப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக உக்ரைன் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
