சிம்பாப்வே எரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

மேலும் 27 பேர் மாயமாகியுள்ள நிலையில், தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 77 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தீவு ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

90 பேர் மட்டும் பயணம் செய்யும் திறன் கொண்ட படகொன்று, அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ பயணச்சீட்டு விற்பனைத் தரவுகளின்படி, விபத்துக்குள்ளான இப்படகில் 114 பயணிகளும் 5 பணியாளர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பயணச்சீட்டு தேவையில்லாத சிறு குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles