காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பலஸ்தீனா்கள் பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பலஸ்தீனா்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா முனை முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய பலியை உறுதிப்படுத்திய அம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை அதிகாரி, காஸா நகருக்கு வடக்கே அமைந்துள்ள தவாம் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் பலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

தெற்கு காஸாவில், கான் யூனிஸ் நகரின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு பாலஸ்தீனியர் பலியானதை நாசர் மருத்துவமனை உறுதிப்படுத்தியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, மற்றொரு தனித்தனி சம்பவத்தில், காஸா நகரின் மேற்குப் பகுதியில் வாகனம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதேபோல் தெற்கு காஸாவின் அல்-மவசி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரம் ஒன்றின் மீதான ட்ரோன் தாக்குதலில் மற்றொருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்தது. எனினும், ஹமாஸ் படையினரைக் குறிவைத்தே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles