சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபா் ஷி ஜின்பிங், தனது அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்த அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்பை இந்த ஆண்டில் மேலும் இரண்டு முறை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது அவரிடம் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு விருப்பமா? என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டார் என சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டியூ ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
தைவானுக்கு அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் ஆயுத விற்பனையை நியாயப்படுத்தும் வகையில், இது உலகம் முழுவதும் அமெரிக்கா மேற்கொள்ளும் பல விற்பனைகளில் ஒன்றுதான் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கூறினார். அத்துடன், நீங்கள் அமெரிக்க ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா? என்றும் அவர் கேட்டதாக டேவிட் பெர்டியூ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுக்கே ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த சாத்தியக்கூறை டிரம்ப் முன்வைத்தார் என டேவிட் பெர்டியூ கூறினார்.
இத்தகைய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், சீனா மற்றும் தைவான் விவகாரத்தில் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் அமெரிக்கக் கொள்கை தலைகீழாக மாறும்; மேலும், அமெரிக்கத் தொழில்நுட்பம் ஒரு சாத்தியமான எதிரியின் கைக்குச் செல்லும் அபாயமும் ஏற்படலாம். இந்த முன்மொழிவு எப்போது செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடவில்லை.
