உத்தர பிரதேசத்​தில் 60 மணி நேர தொடர் மழையால் 56 பேர் உயிரிழப்பு, 1,000 வீடுகள் சேதம்!

உத்தர பிரதேசத்​தில் 60 மணி நேரம் இடை​வி​டா​மல் பெய்த தொடர் மழை​யால் 56 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக உத்தர பிரதேசம் முழு​வதும் சனிக்​கிழமை கனமழை பெய்ய தொடங்​கியது. குறிப்​பாக சீதாபூர், லக்​கிம்​பூர் கெரி, பலராம்​பூர், கோரக்​பூர், அயோத்தி உட்பட 32 இற்கும் மேற்​பட்ட மாவட்​டங்​களில் கனமழை பெய்​தது. மாநிலம் முழு​வதும் நேற்று வரை 60 மணி நேரத்​துக்​கும் மேலாக இடை​வி​டா​மல் மழை கொட்​டித் தீர்த்​தது.

கனமழை பாதிப்​பு​களால் உத்தர பிரதேசம் முழு​வதும் 56 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மிக அதி​கபட்​ச​மாக சீதாபூரில் 7 பேர் உயிரிழந்து உள்​ளனர்.

லக்​கிம்​பூர் கெரி, பலராம்​பூர், அயோத்​தி, கோரக்​பூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் அதிக உயி​ரிழப்​பு​கள் நேரிட்டு உள்​ளன. வீடு​கள் இடிந்​தது, மரங்​கள், மின் கம்​பங்​கள் முறிந்து விழுந்​தது உள்​ளிட்ட சம்​பவங்​களால் மாநிலம் முழு​வதும் 46 பேர் படு​கா​யம் அடைந்து உள்​ளனர். 1,000 இற்கும் மேற்​பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்​ளன. கனமழை​யால் 107 கால்​நடைகளும் உயி​ரிழந்​துள்​ளன.

கங்​கை, யமுனை, காக்​ரா, ராப்​தி, கண்​டக், சோன், ஜிக்கோ உள்ளிட்ட நதி​களில் அபாய அளவைத் தாண்டி வெள்​ளம் பாய்கிறது. இதனால் 32 மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்டுள்ளது. தலைநகர் லக்னோ உட்பட பல்​வேறு நகரங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்ளன. தேசிய நெடுஞ்​சாலைகள், விரைவுச் சாலைகள் வெள்ளத்தால் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன.

இதுகுறித்து வானிலை ஆய்​வாளர்​கள் கூறும்​போது, “எல் நினோ பாதிப்பு காரண​மாக உத்தர பிரதேசத்​தில் வழக்​கத்​துக்கு மாறாக கனமழை பெய்து வரு​கிறது. கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது 90 முதல் 73% வரை மழை அதி​கரித்​திருக்​கிறது” என்​றனர்.

மழை​யால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் போர்க்​கால அடிப்படையில் நிவாரணப் பணி​களை மேற்​கொள்ள முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்​தர​விட்டு உள்​ளார். மாநிலம் முழு​வதும் தேசிய, மாநில பேரிடர் மீட்​புப் படைகளைச் சேர்ந்த வீரர்​கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles