அதிபர் சவால் நிதிக்காக ஊழியர்களுடன் சேர்ந்து தாமும் பிரியாணி சமைத்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்.
அதிபர் சவாலுக்காக பிரியாணி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் கிட்டத்தட்ட 70 பள்ளிவாசல்கள் இணைந்துள்ளன.
வசதி குறைந்தோருக்கு 150,000 வெள்ளி திரட்டும் முயற்சியில் அவை ஈடுபடடுவருகின்றன.
இந்த முயற்சியில் அவர்களோடு சேர்ந்து அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரியாணி சமைக்கக் கைகொடுத்தார்.பிறகு அவற்றைப் பரிமாறவும் உதவினார்.
இந்த பிரியாணி விநியோகம் மூலம் திரட்டப்படும் நிதி வசதி குறைந்தோரையும் சமூக ஆதரவுத் திட்டங்களையும் சென்றுசேரும்.
இதுவரை பள்ளிவாசல்கள் இணைந்து செய்யும் இந்த வருடாந்த நிதித்திரட்டு மூலம் சுமார் நான்கு மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
