திருகோணமலையில் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!

திருகோணமலை – கப்பல்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் திருகோணமலை, ஆண்டான்குளம் – பேதிஸ்புர பகுதியைச் சேர்ந்த ரத்ன விபுசன குலதுங்க ஆராய்ச்சிலாகே கயான் மனுசங்க (வயது 39) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்டப் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என்றும், அவருக்கு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles