வணக்கம்.

வணக்கம்.

அனேகமான தமிழர்களுக்கு தமிழர்களைப்பற்றி தெரியும், இருந்தும் தங்களைப்பற்றியே தெரிபாத தமிழர்களும் தொகையாக இருக்கிறார்கள். தமிழைப் புகளும் எங்களுக்கு தமிழரை, அனேகமாக எங்களுக்கு அறிமுகமான தமிழர்களை நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று சொல்ல மனம் இடம் கொடுக்காது. அன்னியர்கள் யாராவது எங்களுக்குத் தெரி்ந்தவர்களை குறைசொன்னால் அந்த அன்னியர் பக்கம் சேர்வது எமது இயற்கை. இந்தக் கீழ்த்தரமான குணத்தினால்தான் நாம் நூறு கோடிட்கு மேலான சனத்தொகையாக இருந்தும் ஐக்கிய நாட்டு சபையில் தமிழர்களுக்கு என்று உறுப்பிடம் இல்லை.  ஒரு கோடிக்கும் குறைவான சனத்தொகை கொண்ட பலநாடுகளுக்கு அங்கத்துவம் இருக்கும்போது நூறு கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையுள்ள தமிழ் சமுதாயத்திற்கு ஏன் அங்கத்துவம் இல்லை என்பதின் காரணத்தை யோசித்துப் பாருங்கள்.

காட்டுமுராண்டித்தனமான வெள்ளையர்கள் எங்கள் நாட்டைக் கைப்பிடித்து எங்களையே அவர்களின் தொழிர்கார்களாக்கி எங்களின் சொத்துக்களையும் எங்கள் நாட்டுச் சொத்துக்களையும் தங்கள் நாடுகளுக்கு அனுப்பி எங்களை மூன்றாம் தேசத்தவர்க்கி பல்லாண்டுகளாக வெள்ளையர்கள் உல்லாசமாக அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் என்ன? சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிரிந்தே நாகரீகத்தில் நாங்கள்    முன்னேறி இருக்கும்பொளுது வெள்ளையர்கள் மிருகங்களின் தோல்களால் தங்களை மூடி புத்துக்களில் வாழ்ந்தார்களென்று சரித்திர ஆதாரங்கள் அனேகமுண்டு.

இப்படியான அபிப்பிராயத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன்.     எங்களின் தற்போதய நிலையைச் சிறிது யோசித்துப் பாருங்கள்:

தமிழ் நாட்டில் தமிழர்கள் இந்தியாவின் இரண்டாந்தர பிரசைகள்

ஈழ நாட்டில் தமிழர்கள் சிறீலங்காவின் இரண்டாந்தர பிரசைகள்

மலேசியாவில் கூலியாளராக ஆங்கிலேயர் கொண்டுபோன தமிழர்கள் இன்னமும் உரிமையின்றியே வாழ்கிறார்கள்.

மலாயாவிலிருக்கும் நிலையைவிட மோசமான நிலையில்தான் கீள்வரும் நாடுகளில் உரிமை குறைந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்:

றீயூனியன் – பிரான்ஸின் குடிநாடு

தென்னாபிரிக்கா

மொறிஷியஸ்

அன்டமான் தீவு

விஜீ (FIJI)- பெயரைத்தவிர பரம்பரை மழுவாக மறைந்து வி்ட்டது

இந்த நாடுகளைத்தவிர இனப்பிரச்சையினால் உயிரைக் கார்ப்பதற்காக ஈழநாட்டை விட்டு அகதிகளாக வெளியேறிய தமிழர்களின் தொகை சராசரமாக ஒன்றரைக் கோடியாகும். இவர்கள் அனேகமாக ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரம்பி வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைத்தரம் நன்றாகத்தான் இருக்கின்றதென்றாலும் முளுச் சுதந்திரத்துடன் இருக்கின்றார்களென்று சொல்ல முடியாது. இனத்துவேஷத்தால் அனேகமாக எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தப்பிரச்சினைகளைத் தீர்பதென்பது தனியாரால் முடிந்த காரியமில்லை, ஆனால் நாம் எல்லோரும் அப்படியே நினைத்தால் தமிழர்களின் காரியங்கள் ஒன்றுமே நிறைவேறாது. ஆகவே என்னால் செய்யக்கூடியதை செய்வோமென்று எண்பத்தொரு வயதில் வலைத்தளம் sangathy.com ஐத் தொடங்கி இருக்கின்றேன். உங்களிடம் பணஉதவி கேட்பதற்காக கட்டாயமாக இந்தத் தபாலை எழுதவில்லை. ஆனல் நீங்கள் ஒருவியாபாரியாக இருந்தால் உங்களின் ஸ்தாபனத்தை sangathy.com  ல் விளம்பரம் செய்யலாம். அல்லது நீங்களொரு வாழ்க்கைத் தொழிலராக இருந்தால் உங்களின் தொழிலை விளம்பரம் செய்தால் அந்த உதவியே எங்களுக்கு போதும். நீங்கள் விளம்பரம் செய்வதற்குமுதல் உங்களுக்கு தெரியவேண்டிய விபரங்களை sangathy.com ல் அறியலாம். பிரதானமாக எந்தெந்த நாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கின்றார்கள் என்ற பட்டியை பார்க்க வேண்டும். நாங்கள் கனவிலும் நினைக்கமுடியாத இடங்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடியேறி இருக்கிறார்களென்பது அதிசயமானதுதான். https://sangathy.com/tamils-worldwide     திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழ மொளியைத் கைப்பற்றிவரும் சமுதாயமென்பதில் சந்தேகமில்லை ஆனால் சமுதாயங்கள் ஒன்றுசேர்ந்து தமக்கென்றொரு தனிச் சுதந்திரநாடு தேவையென்று நினைக்காதது மிகவும் கவலைக்கானது. இந்த நாடுகளிலுள்ள தமிழர்கள் அனைவருடனும் தொடர்பு வைக்கவேண்டியதுதான் எமது முக்கியமான நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உங்களுக்குத் தெரிந்த ஒருவரை அறிமுகப்படுத்தினாலே பெரிய உதவியாக இருக்கும்.

மேலும் உங்களுக்குத் தமிழ் கலையில் ஆர்வம் இருந்தால் நீங்களியற்றிய பாடல்களையோ எழுதிய சிறுகதைகளையோ நீங்களாகவே எடுத்த புகைப் படங்களோ இருந்தால் இலவசமாகப் பிரசுரிக்கச் சந்தர்ப்பமுண்டு.

நன்றி

லிங்கன் இராசலிங்கம்

Lincoln@sangathy.com

admin

admin

Leave a Reply

%d bloggers like this: