Sangathy
News

மின்சார சபை மறுசீரமைப்பிற்கான திட்ட வரைபிற்கு அமைச்சரவை ஒப்புதல்

Colombo (News 1st) மின்சார சபை மறுசீரமைப்பிற்கான திட்ட வரைபு, உத்தேச காலவரையறைக்கு நேற்று (17) அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

மின்சார சபை புதிய சட்டமூலம் மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக பணியகமொன்றை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம், சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பானிய நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பை, இந்த செயன்முறை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மற்றும் மனிதவள கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முழுமையான செயன்முறையை இவ்வாண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் முழுமைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

Related posts

Chile’s ‘Brexit moment’: Congress passes pensions bill, president agrees to sign it

Lincoln

மாத்திரை தொண்டையில் சிக்கியதில் சிறுமி மரணம்..!

Lincoln

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy