Sangathy
News

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள காலப்பகுதியில் நிதி அமைச்சின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி வௌிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வரை நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடமையாற்றவுள்ளார்.

இதற்கான நியமனப்பத்திரத்தை ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

Related posts

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆர்மி சனத் கைது

Lincoln

Mahanamahewa flays ‘parliamentary system’ over contempt of SC issue

Lincoln

Colombo (News 1st) சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy