Sangathy
News

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள Threads; ஒரு கோடி பேர் இணைவு

Colombo (News 1st) ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு மாற்றாக Meta-வின் Threads தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Threads தளம் ஆரம்பிக்கப்பட்ட 7 மணித்தியாலங்களில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இந்த ட்விட்டர் தளத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ள அதன் பயனர்கள்  Threads-இல் இணைவார்கள் என கருதப்படுகிறது.

Meta-வின் Instagram தளத்தை அடிப்படையாக வைத்து Threads இயங்குகிறது.  Instagram தளத்தில் ஏற்கனவே Verify செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் Blue Tick வழங்கப்படுகிறது.

அண்ட்ராய்ட் மற்றும் அப்பிள் போன் பயனர்கள் நேரடியாக App Store-இல் இருந்து  Threads செயலியை தரவிறக்கம் செய்யலாம்.
அதன் பின்னர் பயனர்கள் தங்கள்  Instagram கணக்கு விபரங்கள் மூலமாக Login செய்யலாம்.

500 எழுத்துக்கள் எனும் எண்ணிக்கையில் பயனர்கள் தமது பதிவுகளை  Threads-இல் மேற்கொள்ள முடியும்.

இணைப்புகள் (Links), ஔிப்படங்கள்,  5 நிமிட வீடியோக்களையும் பதிவிட முடியும். பதிவு ஒன்றில் 10 படங்களை உள்ளடக்க முடியும்.

ட்விட்டரை போலவே பதிவை மீண்டும் Repost செய்யவும், Quote செய்யவும் முடியும். பதிவை லைக் செய்யவும், Instagram-இல் பகிரவும் முடியும்.

பயனர்கள் இதில் Stories-ஐ இப்போதைக்கு பகிர முடியாது.

Related posts

Campaign finance Regulation Act effective from 24 January- Minister of Justice

Lincoln

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு

Lincoln

SJB slams AG over delay in responding to its RTI query

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy