Sangathy
News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Pakistan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடத் தடையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது பெற்ற பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல், விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அவருக்கு பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஞ்சாப் பொலிஸார் லாகூரில் அவரை கைது செய்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அமைவாக, இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Lincoln

Hambantota Port surpasses half a million mark of RORO cargo

Lincoln

Jose Mourinho

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy