Sangathy
News

4 பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக கோபால் பாக்லே தெரிவிப்பு

Colombo (News 1st) நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்ட கால முதலீடுகள் ஆகிய 4 துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று(23) இடம்பெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்க கூட்டத்தில் உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு இதன்போது நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியதாக பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

Govt. hospitals lack basic means to fight widespread malnutrition in children

Lincoln

Is the Crook Trump finally caught?

Lincoln

Speaker orders out SJB’s Wijesiri

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy