Sangathy

Sangathy

பொலிஸ் நிலையங்களை மீண்டும் கண்காணிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கண்காணிப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்யும் வழிமுறைகள்  மற்றும் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Leave a Reply

%d bloggers like this: