Sangathy
News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது கிலோமீற்றரில் பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில் மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Kandy Falcons defeat Galle Gladiators by 5 wickets

Lincoln

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Lincoln

ரஜரட்​டை பிரதேசத்திலுள்ள 7 டிப்போ ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy