Sangathy
LatestSports

ஆப்கான் அணியை வீழ்த்தியது இலங்கை..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக Charith Asalanka ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், Kusal Mendis 61 ஓட்டங்களையும், Sadeera Samarawickrama 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Azmatullah Omarzai 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 309 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகப்பட்சமாக Rahmat Shah 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக Wanindu Hasaranga 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0 என 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

Related posts

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும்: ICC அறிவிப்பு

John David

Najam Sethi to replace Ramiz Raja as PCB chairman

Lincoln

டில்லி-லக்னோ அணிகளிடையான மோதல் இன்று..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy