Sangathy
IndiaNews

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் : கமல்ஹாசனை வளைத்த ஸ்டாலின்..!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. நகர்ப்புறங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்ட கமல்ஹாசனை கூட்டணிக்கு கொண்டு வந்து கோவை தொகுதியை ஒதுக்கலாம் என்று திமுகவுக்குள் பேசப்பட்டு வந்தது.

திமுக கூட்டணியில் 2019 முதல் இணைந்து வரும் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்து வருகின்றன. பாரி வேந்தரின் ஐஜேகே மட்டும் கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது.

திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. விசிக, மதிமுக உடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் மாநிலங்களவை தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. 40 தொகுதிகளிலும் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம். நாட்டின் நலனுக்காக எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Related posts

Hambantota Port surpasses half a million mark of RORO cargo

Lincoln

GMOA: 500 doctors have already migrated, 800 on their way out

Lincoln

Debt restructuring strategy out in April

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy