Sangathy
Sports

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் : சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சாதனைமேல் சாதனைகள்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்களாக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் ரோயல் ஜெலஞ்சர் பெங்களூர் அணி 263 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் Heinrich Klaasen அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் Abhishek Sharma 63 ஓட்டங்களையும், Travis Head 62 ஓட்டங்களையும் பெற்றக்கொடுத்தனர்.

இந்தநிலையில், 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Tilak Varma 64 ஓட்டங்களையும், Tim David ஆட்டமிக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதேநேரம் இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன.

அதன் விபரம் பின்வருமாறு :-

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் ஒன்று பெற்றுக்கொண் அதிகபட்ச ஓட்டங்கள் – 277 சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

04 ஓட்டங்கள் மற்றும் 06 ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் – 69

ஒரு இன்னிங்சில அதிக 06 ஓட்டங்கள் அடித்ததில் மும்பை இந்தியன்ஸ் 20 உடன் 2-வது இடம். ஆர்சிபி 21 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 20 சிக்ஸ் அடித்துள்ளன.

ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்த்து 38 சிக்ஸ் அடித்துள்ளன.

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்ந்த 38 சிக்ஸ் அடித்துள்ளன.

இதற்கு முன்னதாக 2018-ல் ஆர்சிபி-சிஎஸ்கே அணிகள், 2020-ல் ஆர்ஆர்-சிஎஸ்கே அணிகள், 2023-ல் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் விளையாடிய போட்டிகளில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். மொத்தம் 523 (277+246) ஓட்டங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டாவதாக துடுப்பாடிய அணி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக 2020-ல் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்ஆர் 226 ரன் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

இரு அணிகளிலும் நான்கு பந்து வீச்சாளர்கள் 50 ஓட்டங்களுக்கு மேல் அடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 148 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவரில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 141 ஓட்டங்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளது.

Related posts

Wasim Akram reveals he was addicted to cocaine after playing career ended

Lincoln

Percy set for retirement giving us many points to ponder

Lincoln

Lionel Messi scores stunning free kick as Paris Saint-Germain beat Nice

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy