Sangathy
Srilanka

ஞானசார தேரரின் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை தொடர்பிலான பின்னணி..!

பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினால் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவதூறான கருத்து தொடர்பில் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று( 28 வியாழன்) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கினார்.குரகல பௌத்த விகாரையில் அவைத்து 2016இல் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்காக அவர் 100,000 ரூபா அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் இலங்கையில் மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் இஸ்லாமோஃபோபியாவை ஊக்குவிப்பதாக ஞானசார தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 இல், முஸ்லீம்களுக்குச் சொந்தமான வணிகங்களைப் புறக்கணிக்க பெரும்பான்மை சிங்களவர்களுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தில் ஞானசார தேரர் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அளுத்கமவில் இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பொதுபலசேனா ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சமூக ஊடக தளமான Facebook அவரது கணக்கை முடக்கிய நிலையில், 2014 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விசாவை அமெரிக்கா ரத்து செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

அவரை விடுவிக்க முன்னாள் கிழக்கு ஆளுனர் அசாத் மௌலானா போன்றவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசியல் காரணங்களுக்காக சிங்கள பெரும்பான்மையினருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த ஞானசார தேரர் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஞானசார மறுத்து வந்தார்.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, ஞானசார தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, பல நூற்றாண்டுகளாக சிங்களவர்களுடன் இணைந்து வாழும் சாதாரண முஸ்லிம்களுக்கு எதிரானவன் தாம் இல்லை என்றும், மாறாக முஸ்லிம் சமூகத்தில் அண்டிப்படைவாத, வஹாபிச கருத்துகள் இருப்பதாகவும் அதனையே தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.

நெறிமுறையற்ற மதமாற்றங்கள், தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அழிப்பு மற்றும் கலாச்சார படையெடுப்பு பற்றி மட்டுமே பொதுபலசேனா கருத்துக்களை வெளியிடுவதாகவும் கூறினார்.

இன்றைய தினம் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்த சம்பவம் தொடர்பாக அவர் அண்மையில் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலப்படுத்த வேண்டுமென யாழ்ப்பாணத்தில் வைத்து கருத்தி வெளியிட்டிருந்தார். இதற்கெதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து 2023 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவரது வழக்கினை முன்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்த நிலையில அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

3 ஆயிரம் கடற்படையினருக்கு பதவி உயர்வு..!

tharshi

தரமற்ற மருந்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவர் பலி..!

tharshi

பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy