Sangathy
Cinema World

மாரடைப்பில் காலமான டேனியல் பாலாஜி : நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு எப்போதும் ஒரு தனியொரு வரவேற்பு உள்ளது. அப்படி தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் டேனியல் பாலாஜி. 48 வயதே ஆன இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் மேனனின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் டேனியல் பாலாஜி. அதிலும் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலை மிரள விடும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளியிருப்பார். இதனையடுத்து பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தார்.

அதிலும் வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்தில் மெயின் வில்லனாகவும், ‘வடசென்னை’ படத்தில் அமீரின் தம்பியாகவும் நடிப்பில் மற்றொரு பரிணாமத்தை காட்டியிருப்பார். மேலும், விஜய்யின் பைரவா, பிகில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் டேனியல் பாலாஜி.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டேனியல் பாலாஜி. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 48 வயதே ஆன டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் டேனியல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்கள் தானம் செய்ததன் மூலம் நிஜ வாழ்க்கையில் டேனியல் பாலாஜி நாயகனாகவே திகழ்கிறார்.

Related posts

இந்தியன் 2 ரிலீஸ் திகதியை லாக் செய்த கமல் : ரிலீஸ் திகதிக்கு பின்னால் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கா..?

tharshi

சித்தார்த் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு..!

tharshi

முகேஷ் அம்பானி மகள் வீட்டை ரூ. 500 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை, கணவர் நடிகர்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy