Sangathy
Srilanka

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக நியமன விண்ணப்பங்கள் கோரல்..!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (காஆஅ) உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காஆஅ விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2024 மே 27 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்கள், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

விண்ணப்பத்திற்கு,

 

 

Related posts

திருடுவதற்கு வீட்டுக்குள் நுழைந்த திருடன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

tharshi

களுத்துறை நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை..!

tharshi

அதிகரிக்கவுள்ள பொதுமக்களின் வருமானம் : மத்திய வங்கி ஆளுநர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy