Sangathy
Cinema World

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் : வாழ்த்திய நடிகர் சத்யராஜ், பிரபு..!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில், இன்று (மே 9) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

“என் நண்பன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,” என்று தெரிவித்தார்.

இதே போன்று நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

“என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது, என் இனிய நண்பர் கேப்டனுக்கு விருது. பத்ம பூஷன் விருதை கேப்டனுக்கு கொடுத்ததில் எங்க திரையுலகம் மிகவும் சந்தோஷம் அடைகிறோம். எங்களது அன்னை இல்லம் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனுசல வாழ்ந்துட்டு இருக்காறு. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி,” என்று தெரிவித்தார்.

Related posts

உடல்நலக்குறைவு காரணமாக டைட்டானிக் நடிகர் உயிரிழப்பு..!

tharshi

குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி அஜித்குமார்..!

tharshi

துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு.? : ஆண்டவரின் ‘தக் லைஃப்’ படத்தில் அதிரடி மாற்றம்…!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy